2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘தேர்தலை நடத்தக் கோரி, பாதீட்டை நிறைவேற்றவும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மைக் கட்சிகள், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக் கோரும் அழுத்தத்தைக் கொடுத்து, உடன்பாட்டை எட்டிய பின்னர், அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, வரவு - செலவுத் திட்டத்தை (பாதீடு) நிறைவேற்றலாமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆலோசனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்ற சிறுபான்மைக் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற வரவேற்கத்தக்கதென்றார்.

ஜனாதிபதி இவ்விடயத்தில் அதிக கரிசனை காட்டியபோதும்  இவ்விடயம் காலதாமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் சட்டத்திருத்தப் பிரேரணை ஒன்றை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலம் பிரதமர் நினைத்தால் ஒரேநாளில் இதற்கான தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .