Princiya Dixci / 2020 நவம்பர் 22 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
திகிலிவெட்டை ஆற்றில் தோணியொன்று, நேற்று (21) மாலை கவிழ்ந்ததில் 8 பிள்ளைகளின் தந்தையான திகிலிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து உதயச் சந்திரன் (வயது 51) எனும் குடும்பஸ்தர் மரணித்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், மாவடிமுனையிலிருந்து முறக்கொட்டாஞ்சேனை ஊருக்குப் பயணிக்கும் நோக்கில் திகிலிவெட்டை ஆற்றைத் தோணியின் மூலம் கடந்து கொண்டிருக்கும்போது, தோணி கவிழ்ந்துள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கில் விரைந்துள்ளனர். எனினும், உதவிக்கு விரைந்தவர்கள் நீரில் மூழ்கியவரை நெருங்கியபோதும் அவரது சடலத்தையே மீட்க முடிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago