2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நினைவு கூரும் வணக்க நிகழ்வு

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.சபேசன்,வ.துசாந்தன்,வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதிகளில் மற்றும் இரால்வளர்பு பண்ணையிலும் கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவு கூரும் 29வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை, பிற்பகல் 2மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் சிவஞானம் சிறிதரன், 'மறந்தாலும் மண்ணும்இரையாகும்'எனும் தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றவுள்ளார்.

'வாழ்வை நோக்கி,,,,,!' தலைமைக்கவிஞர்:அரசையூர் மேரா தலைமையில் அரங்ககவிஞர்களான கவிஞர் முருகு தயாநிதி,கவிஞர் சொலையூரான் தனுஷ்கரன், கவிஞர்அழகு தனு,கவிஞர் மேகராசா,கவிஞர் செல்வி ந.தர்ஷினி,கவிஞர் மயில் சூரியகுமாரன் ஆகியோரின்  சிறப்பு கவிஞரங்கமும் இடம்பெறும்.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலய குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்கம் குருக்கள் ஆசிஉரையும் பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் சி.புஷ்பலிங்கம் தொடக்கவுரையும் பொருளாளர் பி.நீதிதேவன் வரவேற்புரையும் செயலாளர் த.தியாகராசா நன்றியுரையும் நிகழ்த்துவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X