Niroshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் நியாயாதிக்கப் பிரிவிலுள்ள பிணக்குகளுக்கான வழக்குகள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பிரதேச மக்களின் நன்மை கருதி, அவர்களது பயண சிரமங்களையும் நேர விரயத்தையும் பணச் செலவையும் தவிர்க்கும் முகமாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
கொக்கட்டிச்சோலை பிரதேச மக்கள் தற்பொழுது மண்முனை வாவியினூடாக அமைக்கப்பட்டுள்ள நவீன பாலத்தின் வழியே இலகுவாக போக்குவரத்துச் செய்து மட்டக்களப்பு நகரை அடைய முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago