Princiya Dixci / 2022 மே 11 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர், 4ஆம் குறிச்சி பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள நகைத் தொழிலகம் உடைத்துத் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஆத்ம பரணீதரன் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் சோகோ பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
உடனடியாக விசாரணை மேற்கொண்டதில் 2.5 கிராம் நகை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர் ஒருவர் மரணித்ததனால் இந்த நகைத் தொழிலகம் கடந்த எட்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் எட்டு நாட்கள் கழிந்த நிலையில் இன்று (11) வந்து கடையைத் திறந்தபோது, கடை பூட்டு உடைத்து திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாக கடை உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நகைத் தொழிலகத்துக்கு அருகிலுள்ள மற்றொரு நகைக் கடை கடந்த 2ஆம் திகதி பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ஏ.ரி.எம்.வங்கி அட்டை உட்பட இன்னும் சில பொருட்கள் திருடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவங்கள் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
22 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago