Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ எவராயிருந்தாலும் பாகுபாடு காட்டாத நல்ல அரசியல் தலைவனே நாட்டுக்குத் தேவை” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் போக்கு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களின் மனப்பாங்குகளும் அதன் மூலமாக அவர்களது செயற்பாடுகளுமே நாட்டை பாகுபாட்டின் மூலம் சீரழித்துள்ளதென சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அரசியல் தலைவர்களின் வழிநடத்தல்களை புறந்தள்ளிவிட்டு, எதிர்கால இளம் அரசியல் தலைவர்கள் இனவாதம், மதவாதம், மொழி பேதம் கடந்து நாட்டை ஒருமைப்பாட்டின் தளமாகக் கட்டியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மதிப்பு மிக்க சில தலைவர்கள், இலங்கையர்களாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, இன, மத, மொழி, பேதம் கடந்து சேவையாற்றியிருக்கின்றபோதும் சில இனவாதத் தலைவர்களாலேயே நாடு இன்றளவும் சிதைவடைந்து போயுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
சிறுபான்மை பெரும்பான்மை என்று பேதம் காட்டாது, அனைத்து சமூகத்தவர்களையும் அரவணைத்துக் கொண்டு, அபிவிருத்தயை நோக்கி நாட்டைக் கட்டியெழுப்பும் தேசபக்த முயற்சியை எதிர்கால இளம் சமூகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் இளைய தலைமுறையினருக்கான தனது அறைகூவலில் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago