2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைமைத்துவ மாற்றம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 01 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பேராளர் மாநாடு நேற்று  (30) காத்தான்குடியில் நடைபெற்ற போதே புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய தவிசாளராக என்.எம்.சிறாஜ் மசூரும் இக் கட்சியினுடைய பிரதி தவிசாளராக முன்னாள் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ், தேசிய அமைப்பாளராக முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஆர்.நஜா முஹம்மட், கட்சியின் பொருளாளராக எம்.எச்எம்.ஹனான் ஹுஸைன் பிரதி பொதுச் செயலாளராக றிஸானா சிமாஸ் பிரதி பொருளாளராக எஸ்.ஏ.ஹலீம் இஸாக் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய தவிசாளர் என்.எம்.சிறாஜ் மசூர் 2017 ஜுன் மாதம் 27ஆம் திகதி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பேராளர் மாநாடு இதுவாகும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய தலைமைத்துவ சபையில் 17 பேர் அங்கத்தவர்களாக இருப்பார்கள். அதில் பத்து உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த பத்து பேரும் ஒன்றினைந்து மேலும் 7 பேரை நியமிப்பார்கள். இதனடிப்படையில் 17 பேர் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த தலைமைத்துவ சபை அடுத்து வருகின்ற நான்கு வருடங்களுக்கு பதவி வகிப்பார்கள். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினைப் பொறுத்தவரையில் இந்த புதிய அரசியல் கலாசாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும் நேர்மையான அரசியல் பயணத்தில் நாங்கள் இருக்க வேண்டுமென்ற உறுதியோடு நாங்கள் தளராமல் இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X