Princiya Dixci / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், நாவற்குடா சேமக்காலைக்கு முன்பாக இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, அங்கிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள், நாவற்குடா சேமக்காலைக்கு முன்னால் யூ வளைவில் திரும்பியபோது, இரு மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் படுகாயமடைந்த நிலையில், 1990 அம்புலன்ஸ் வாகனத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மட்டக்களப்பு நகர் கிளை மக்கள் வங்கியில் கடமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேந்த வங்கி ஊழியர் ஒருவரும் நாவற்குடாவைச் சேர்ந்த பெண்ணொருவருமே காயமடைந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago