2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக செயலமர்வு

Janu   / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு  என்பன இணைந்து நடாத்திய இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டற் செயலமர்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை  (22) இடம் பெற்றுள்ளது .

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான மயூரி ஜனனினால் இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக  ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வ.சக்தி    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .