Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்றும் அங்கு ஏற்கெனவே 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள் எனவும் கொழும்பிலுள்ள நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்தார்.
நியுஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் நிதியளிப்பில் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியுஸிலாந்து உயர்ஸ்தானீகராலயத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோதும், நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து உயர்ஸ்தானீகர், காத்தான்குடியில் பெண்களுக்கான இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்தார்.
“5 மில்லின் மாத்திரமே சனத்தொகையைக் கொண்ட நியூஸிலாந்து நாடு இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டது. அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
“இங்கே அமர்ந்திருக்கக் கூடிய இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள், நியூஸிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன்.
“நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்த வேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம் வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டுமென நான் அவாவுறுகின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago