Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், துஷாரா
கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதிகோரியும் போட்டிப் பரீடசையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனத்தை வழங்குமாறு கோரியும், வேலையில்லாப் பட்டதாரிகள், நேற்று மாலை மட்டக்களப்பு கல்லப்பாலத்தில் நின்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண சபையால் நடத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தும் ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்க்கப்படாத பட்டதாரிகள் அனைவருக்கும் ஆசிரிய நியமனத்தை வழங்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவில் ஒன்று திரண்ட பட்டதாரிகள், மட்டக்களப்பு கல்லடிப்பாலத்துக்குச் சென்று அங்கு பாலத்தின் மேல் நின்று, இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளை புறக்கனிக்க வேண்டாம், அநிதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதி வேண்டும், அரசாங்கம் எங்கள் மீது கவனமெடுத்து உடனடியாக நியமனத்தை வழங்க வேண்டும்.
“கிழக்கு மாகாணத்தில் 4,927 வெற்றிடங்கள் உள்ளன”, “அவைகளை நிரப்ப வேண்டும்”, “வேலையில்லா பட்டதாரிகளை இன்னும் ஏமாற்றக் கூடாது” போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றும் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்பட வில்லை.
போதியளவு தகுதிகள் உள்ள நிலையில் ஏன் இந்த பாரபட்சம் என நாங்கள் கேட்கின்றோம். கிழக்கு மாகாண ஆளுனர் இது விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி நியமனத்தை வழங்க வேண்டுமென, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .