Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 12 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து மாற்றலாகி, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கான வரவேற்புக் கருத்துகளை மட்டக்களப்பிலுள்ளவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவில் கலந்துகொண்ட நீதிபதி இளஞ்செழியன், இந்த இடமாற்றம் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவ்வைபவத்தில் அவர் குறிப்பிடும்போது,
“நான் மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான இடமாற்றம் விரைவில் எனக்கு வரும். கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. யாழ்ப்பாணத்துக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து ஊடகங்களிலும் சமூக வலைத் தலங்களிலும் பேஸ்புக்கிலும் வெளியானதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக நீதிபதி இளஞ்செழியனை தாம் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றர்.
“உங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றோம்”, “வரவுக்கு வாழ்த்துக்கள்”, “மட்டக்களப்பு தங்களை அன்புடனும், பாசத்துடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றது”, “தங்களது வருகையால் மட்டக்களப்பு மக்களாகிய நாங்கள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .