Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Yuganthini / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகரசபையின் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்களர்ல் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவோரங்களிலும், அரச, தனியார் காணிகளிலும், பொதுவிடங்களிலும் வீச வேண்டாம் எனவும் இதற்கான நீதிமன்றத் தீர்வு வியாழக்கிழமை (14) கிடைக்கும் வரை தங்களின் திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள் என, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வெ.தவராசா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திண்மக் கழிவு அகற்றாமை, திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாநகர சபை அலுவலகத்தில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ஆணையாளர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாநகரசபையானது 1935 ஆண்டு திருப்பெருந்துறையில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் மாநகரத்துக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக முகாமைத்துவம் செய்து அகற்றி வந்தது. சுமார் அறுபது, எழுபது ஆண்டுகளாக இந்த திண்மக்கழிவகற்றலை தொடர்ச்சியாக செய்து வந்தது. இதனை நாளாந்தம் உக்கக்கூடிய, உக்கமுடியாத வகையில் தரம்பிரித்து செய்தும் வருகின்றோம்.
“மட்டக்களப்பு மாநகரத்துக்குள் அமைந்துள்ள 29,442 குடும்பங்கள் மூலமும், ஏனைய நிறுவனங்கள் மூலமும் நாளாந்தம் 90 டொன் குப்பைகள் சேருகின்றது. இவற்றில் 70 டொன் எங்களுடைய மாநகரசபை ஊழியர்களைக் கொண்டு அகற்றி வருகின்றோம். இவற்றில் தற்போது உக்கக்கூடிய கழிவுகள் 23 டொன் ஆகும். இவை திருப்பெருந்துறையில் உள்ள சேதனைப்பசளை தயாரிக்கும் நிலையத்தில் உரம் தயாரித்தலுக்காகப் பயன்படுத்தப்படுவதுடன் உரம் தயாரித்தல் தனித்த செயற்பாடாக அமைகின்றது.
“ஏனைய 46 டொன் கழிவுகள் உக்காத கழிவுகளாகவும், கலப்புக்கழிவுகளாகவும் அகற்றப்பட்டு, திருப்பெருந்துறை நிலப்பரப்புத் தளத்தில் கொட்டப்படுகின்றது. ஏனைய 1.5 டொன் கழிவுகள் பிளாஸ்டிக், காட்போட் கழிவுகளாக சேகரிக்கப்பட்டு, அவை மீள்சுழற்ச்சி நிலையத்தின் மூலம் சந்தையில் விற்கப்படுகின்றன. மீதி 20 டொன் குப்பைகளை பொதுமக்கள் முகாமைத்துவம் செய்கின்றார்கள்.
“பொதுமக்கள் சூழலுக்குப் பாதிக்காத வகையில் பொலீத்தீன், லஞ்சீற், பிளாஸ்ரிக் பொருட்களை தவித்து கொள்வனவு செய்யுங்கள். தனியொருவராலோ அல்லது மாநாகரசபையாலோ முற்றுமுழுதாக சூழலைப் பாதுகாக்க முடியாது. நல்லதொரு தீர்வு கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து, குப்பைகளை தெருவோரங்களில் வீசாமல் மீள்சுழற்ச்சி முகாமை செய்து மாநகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புடன் செயற்படுங்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
9 hours ago