Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான், ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பொத்தனை நீரோடையில் விழுந்து 12 வயது சிறுவன் ஒருவன், இன்று (24) மரணமடைந்துள்ளான் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்னர்.
உயிரிழந்த சிறுவன் வாழைச்சேனை, பாலைநகர் ரகுமானியா வீதியைச் சேர்ந்த றிபாஸ் முகம்மட் ஆசிக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சிறுவன் நீரோடையில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் சடலம் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் சடலம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago