Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டம், அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டிச் சென்றதன் காரணமாக, அங்குவந்த தேர்தல் திகாரிகளால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை வேட்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரி.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது காத்தான்குடி நகரசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், தேர்தல் பரப்புரைகளும் நடைபெற்றன.
இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலதிகமாக கூட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த தேர்தல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் சுசீலன் கூட்டத்தினை இடை நிறுத்துமாறு பணித்ததைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இரவு 10.30 மணி வரை கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 11 மணியையும் தாண்டி கூட்டம் நடைபெற்றதன் காரணமாக உதவி தேர்தல் ஆணையாளர் அங்கு வந்து இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago