Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலய பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் தற்போது குறைவடைந்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவத்தார்.
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி, செவ்வாயக்கிழமை (16) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'கல்குடா கல்வி வலய பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் பாரிய பிரச்சினையாகவுள்ளது. 2013ஆம் ஆண்டி 1,580 மாணவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. 2014ஆம் ஆண்டில் 1300 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். 2015இல் 568 மாணவர்கள் மாத்திரமே இடைவிலகியுள்ளனர்.
'கல்வி இல்லையென் வாழ்கை இல்லை' என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. பெற்றோர்கள், மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். மாணவர்கள் பண்பானவர்களாகவும் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவர்களக்கு நல்ல பண்பு இல்லையெனின் கற்ற கல்வியில் எவ்வித பயனுமில்லை.
மாணவர்களின் கல்வியை சிதறடிப்பதற்கு தற்போது பல வழிகள் காணப்படுகின்றன. மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் படிப்பினைத் தவிர வேறு வழிகளில் கவனம் செலுத்தக்கூடாது. கல்குடா கல்வி வலயத்தைப் பொறுத்தவரை, இதுவரைகாலமும் இருந்துவந்த ஆசிரியர் பற்றாக்குறை, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஓரளவு நீங்கிவிடும். இனிவரும் காலங்களில் இந்த வலயத்தில் மாணவர்கள் பெறுபேறுகளில் முன்னேற்றமடையும்' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago