Princiya Dixci / 2017 ஜனவரி 22 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, நொச்சிமுனையைச் சேர்ந்த 35 வயதுடைய சுஜிதா தவசீலன் என்ற இளம் குடும்பப் பெண்ணைக் கடந்த இரு தினங்களாகக் காணவில்லை என, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று விட்டு வீடு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையிலேயே, இவர் காணாமல் போயுள்ளதாக, உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த இவருடைய அலைபேசி, வியாழக்கிழமை இரவு 8 மணிவரையில் இயங்கியதாகவும் அதன் பின்னர் இயங்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago