2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாண் வாங்க வந்தவருக்கு கத்தி குத்து: ஒருவர் கைது

Sudharshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பாண் வாங்குவதில், ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதலால், கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த கைகலப்பு வாடிக்கையாளருக்கும் கடை ஊழியர்களுக்குமிடையில்  திங்கட்கிழமை (06) இரவு ஏற்பட்டது. கத்தி குத்துக்கு இலக்கானவர்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் பொருட்களும்; சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம், தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்த காத்தான்குடிப் பொலிஸார், சம்பவத்தின் போது உணவகத்திலிருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X