2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பொதுச் சபைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் 13ஆவது பொதுச் சபைக் கூட்டம், எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஏறாவூர் அல்-ஜிப்ரியா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக அச்சங்கத்தின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.சஜீத்,  இன்று  புதன்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  அதிதியாக இந்தக் கூட்டத்தில்  கலந்துகொள்ளவுள்ள
இக்கூட்டத்தில், வடக்கு -கிழக்கு மாகாண அரச சேவையில் நியமனம் பெற்று தற்போது தேசிய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஊழியர்களை மத்திய அரச சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்தல்.

நீண்டகாலம் நிரந்தர நியமனம் பெற்றுச் சேவை செய்தாலும், தகுதிகாண் கால முடிவில் பதவி நிரந்தரம் ஆக்கப்படாதிருக்கும் ஊழியர்களின் கல்வித் தகைமையை கவனத்தில் கொள்ளாது நிரந்தரமாக்குதல்,

2015ஆம் ஆண்டுக்குரியதாக உள்ள வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சையை நடாத்துதல், தற்காலிக ஊழியர்கள் தகுதி நிபுணத்துவ சேவையாளர்களின் தரத்தில் தேர்ச்சி உத்தியோகத்தர்கள் தரத்திற்கு பதவி உயர்வு செய்வதற்கு முறையான திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற கோரிக்கைகளை  முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X