2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை சனிக்கிழமை (05) இரவு கைதுசெய்ததாக பொலிஸார்; தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

06 பேரைக் கொண்ட குழுவினர் புதையல் தோண்டுவதற்காக கொக்கட்டிச்சோலை காட்டுப்பகுதிக்கு சென்றமையை அவதானித்த பொதுமக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்குச் சென்று மூன்று பேரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

இதேவேளை, மேலும் மூன்று பேர் தப்பிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்; கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X