2025 மே 07, புதன்கிழமை

பிரசன்னாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண சபையின் துணைத் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இவருக்கும் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் மாகாண சபை உறுப்பினர்களுக்கான  பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்த போதிலும் முதலமைச்சர் ,அமைச்சர்கள் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் ஆகியோருக்கான பொலிஸ் பாதுகாப்பு  தொடர்ந்தும்  வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,நேற்று திங்கட்கிழமை மாலை எவ்வித முன் அறிவித்தலும் இன்றி பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் நீக்கப்பட்டுள்ளதாக பிரதி தவிசாளர் பிரசன்னா  இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து  அவர்களுக்கு கிடைத்த பணிப்புரையின் பேரிலேயே அவர்கள் பொலிஸ் நியைத்துக்கு திரும்பியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X