2025 மே 08, வியாழக்கிழமை

பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு விடுமுறை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் எதிர்வரும் 31ஆம் திகதிவரை உயர்தர வகுப்பு மாணவர்களுக்குத் தவிர, ஏனைய மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக   காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனச் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறையுடன் மாணவர்களுக்கு போதிய ஓய்வு வழங்குமாறும் இதன் காரணமாக காத்தன்குடிப் பிரதேசத்திலுள்ள சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களையும் கடந்த 15ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 31ஆம் திகதிவரை மூடுமாறு காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கேட்டிருந்தது.

எனினும், சில பிரத்தியேகக் கல்வி நிலையங்கள் இந்தக் காலப்பகுதியில் மூடப்படாமை தொடர்பில் சம்மேளனத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில்  அனைத்து பிரத்தியேகக் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்; சம்மேளனப் பிரதிநிதிகளுக்குமிடையில்; பள்ளிவாசல் சம்மேளன அலுவலக மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X