Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 35 ஆம் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை புகுந்த காட்டுயானை ஒன்று இக்கிராமத்தில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தின் களஞ்சிய அறையினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் வீடொன்றையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதனால் ஆலயத்தின் களஞ்சிய அறை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீட்டில் விதைப்புக்காக வைக்கப்பட்டிருந்த 5 நெல்மூட்டைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிப்புக்குள்ளான இடத்துக்கு நேற்று திங்கட்கிழமை மாலை சென்ற கிழக்கு மகாணசபை உறுப்பினர் மா.நடராசா நிலமையினைப் பார்வையிட்டு,வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு காட்டுப் பகுதியில் தங்கி நிற்கும் காட்டுயானைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தற்போதைய நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக வேண்டி யானைப்பாதுகாப்பு வெடிகளை மக்களிடம் வழங்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago