2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பெற்றோல் குண்டுகள் மீட்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 12 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி கர்பலா வீதியில் பெற்றோல் குண்டுகள் இரண்டு, இன்றுக் காலை மீட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக சுத்தம் செய்துகொண்டிருந்த அவ்வீட்டுப் பெண்ணொருவர், பெற்றோல் குண்டுகள் கிடப்பதைக் கண்டு, அவ்விடத்தில் நின்ற பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, காத்தான்குடி பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுதத்து, அங்கு விரைந்த பொலிஸார், குறித்த பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .