2025 மே 08, வியாழக்கிழமை

பால்நிலை சமத்துவம் தொடர்பில் விளக்கமளிப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுற்றுலாப் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பது மற்றும் பால்நிலைச் சமத்துவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு லங்கா ரெஸ்ட் விடுதியில் தேவை நாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகளின்போது பெண்கள் தொடர்பில் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இதன்போது தேவை நாடும் மகளிர் அமைப்பின் பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உளவளத்துணையின் அவசியம் தொடர்பிலும் மேற்படி அமைப்பின் இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சனால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

பால் மற்றும் பால் நிலைக்கிடையிலான வேறுபாடு, சமூகத்தின் மாறாக்கொள்கை, நிலைப்பாடு தொடர்பில் அமைப்பின் உளவளத்துணையாளர் திருமதி பி.ஜெயதீபாவினாலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதில் பொலிஸாரின் பங்கு, சுற்றுலா சார்ந்த இடங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் திணைக்களத்தின் இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் கருத்துரைகளை வழங்கினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகளும் தொடர்பில் சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சனால் விளக்கமளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X