2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாலியல் சேஷ்டை; இளைஞரின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞரின் விளக்கமறியல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை குறித்த இளைஞர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (2) மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பிரத்தியேக வகுப்புக்கு சென்றுவிட்டு  வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவரை பின் தொடர்ந்த குறித்த இளைஞர், குறித்த மாணவியின் பின் பகுதியில் கையினால் தட்டிவிட்டு சென்றுள்ளார்.

குறித்த மாணவி சத்தமிடவே, அங்கிருந்த பொதுமக்கள் குறித்த இளைஞரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.   
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X