Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
கடந்த ஒரு வருடமாக பட்டிருப்புப் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதன் காரணமாக அப்பகுதி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பாரம் குறைந்த வாகனங்கள் மாத்திரமே குறித்த பகுதியால் பயணிக்க முடியுமெனவும் அங்கு அறிவித்தல் இடப்பட்டுள்ளது.
பட்டிருப்புப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் மட்டக்களப்பு, வாவிக்கு குறுக்காக இடப்பட்டுள்ள இப்பாலத்தினூடாக படுவான்கரைப் பகுதிக்கான போக்குவரத்துகள் இடம்பெறுகின்றன. இப்பாலத்தினூடாக மக்கள் அச்சத்துடன் பயணிப்பதாகவும் சேதமடைந்த இப்பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பாலத்துக்கான புனரமைப்பு தொடர்பில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் வை.தருமரெத்தினத்திடம் நேற்று புதன்கிழமை கேட்டபோது, 'இப்பாலத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள கம்பிகள் செயலிழந்துள்ளன. இந்நிலையில், இப்பாலத்தை புனரமைக்கும் முகமாக ஆரம்பக்கட்ட ஆய்வுகளையும் திட்ட வரைபுகளையும் எமது தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பியுள்ளோம். தலைமைக் காரியாலய அதிகாரிகளும் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால், இதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் இன்னும் கிடைக்கவில்லை. நிதி கிடைத்ததும்; இப்பாலத்தை புனரமைக்கவுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago