Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள மண்முனைதென் எருவில் பற்று, பட்டிப்பளை, போரதீவுப்பற்று ஆகிய மூன்று சபைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். இதற்கான முழுமையான ஆதரவை மக்கள் வழங்குவார்கள்” என, ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில், களுதாவளையில் வைத்து நேற்று (24) மாலை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில், பலமான கட்சித் தொண்டர்களை தேர்தலில் களமிறக்கியிருக்கின்றோம். கடந்த கால தேர்தலைவிடவும் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும். என்றும் இல்லாத வகையில் மாவட்ட மட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் நிறைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
“மேலும், பிரதேச சபைகளின் ஆட்சி அதிகாரங்களை ஐக்கியக் தேசியக் கட்சி பெறுமானால், கடந்த காலங்களை விடவும் எமது பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தி இலக்கை அடையும்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .