Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜூலை 15 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில், நாளாந்தம் திண்மக் கழிவுகளை சேகரிப்பதற்குப் பதிலீட்டுச் சுகாதாரத் தொழிலாளிகளை ஆட்சேர்ப்பதற்காக பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்களை, காத்தான்குடி நகர சபை முகப்பு அலுவலகத்தில் பெற்றுகொள்ள முடியும் எனவும், விண்ணப்பதாரிகள் தரம் 09 இல் கல்வி பயின்று சித்தியடைந்திருத்தல், 18 வயதுக்குக் குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராவும் இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை, தவிசாளர்/ செயலாளர், நகர சபை, காத்தான்குடி எனும் அலுவலக முகவரிக்கு, 24.07.2018க்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பிவைக்க முடியும் என்பதுடன், மேலதிகத் தகவல்களை காத்தான்குடி நகர சபை முகப்பு அலுவலகத்தில் பெற்றுகொள்ள முடியுமென, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .