2025 மே 12, திங்கட்கிழமை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் வந்தாறுமூலை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
 
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை அதிகரித்து ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்துடன் இணைக்க வேண்டும்.
 
20 வருடங்கள் சேவையாற்றிய பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளத்தில் 20 சதவீதம் வழங்கப்படும் ஓய்வுதியக் கொடுப்பனவுத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
 
அரச ஊழியர்களின் ஓய்வூதியச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 57 இலிருந்து 60ஆக நீடித்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு முன்பாக இதன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X