Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 19 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
திருகோணமலை – கல்முனை சேவையில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஏறாவூர் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மீது, குருக்கள்மடம் பகுதியில் வைத்து, நேற்று (18) மாலை 6.45க்கு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பஸ் சாரதியான ஏறாவூரைச் சேர்ந்த முத்தலிப் பிர்தௌஸ் (வயது 38) என்பவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகிய பஸ்ஸின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு உடனடியாக விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்த நபர்களே தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருப்பதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை, திருகோணமலை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து சிலர், இந்த பஸ் சாரதி மற்றும் நடத்துநருடன் தகராறு புரிந்ததாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்புக் காரில் வந்த நபர்கள் மற்றும் திருகோணமலை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து தகராறில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
24 May 2025
24 May 2025