Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் நகரக் கடைத் தெருவில், நேற்று (02) மாலை சுமார் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி ஏறாவூர் பிரதான வீதி ரேணுகா நகை மாளிகை உரிமையாளர் குமாரசாமி குலசேகரன் (வயது 55) ஏறாவூர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,
“செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியிருக்கும் நகைக் கடை திறந்திருந்தபோது, இரு நபர்கள் கடைக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அதில் ஒரு நபர் உள்ளே வந்து தான் தங்கச் சங்கிலிகளும், மோதிரமும் வாங்கப் போவதாகக் கூறினார்.
“அப்பொழுது விதம் விதமான தங்கச் சங்கிலிகளையும் மோதிரங்களும் உள்ள பெட்டியை எடுத்து அந்த நபர் முன் வைத்து ஒவ்வொன்றாகக் காட்டிக் கொண்டிருந்த போது எதுவும் பிடிக்கவில்லை என்று கூறினார்.
“அதனால் அவற்றை அலுமாரிக்குள் வைப்பதற்கு நான் எழுந்த பொழுது எனது கையிலிருந்த நகைப் பெட்டியை அபகரித்துக் கொண்டு அந்த நபர் எற்கெனவே அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சகபாடியுடன் தப்பித் தலைமறைவாகி விட்டார்.
“அந்த நகைப் பெட்டிக்குள், சுமார் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 48 தங்க மோதிரங்களும், 11 தங்கச் சங்கிலிகளும் இருந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார், சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago