Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2023 மே 29 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமத்திற்கு சந்நதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த ஒருவர் இன்று திங்கட்கிழமை (29) ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 6ம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ் சந்நதி முருகன் ஆரலயத்தில் ஆரம்பித்த பாதையாத்திரை குழுவில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை (28) திகதி இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்து ஆலைய வளாகத்தில் தங்கியிருந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் குறித்த நபர் பணிஸ் உண்ட பின்னார் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தவைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
38 minute ago