2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது

Freelancer   / 2023 ஏப்ரல் 14 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி 

சித்திரை வருடப்பிறப்பான இன்றயத்தினம் மாலை மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் இளைஞர்கள் சிலர் சிறியரக படகு ஒன்றை மிகவும் வேகமாக ஓட்டினர்.

இதேவேளை படகை ஓட்டிய இளைஞர்கள் சற்று நேரத்தில் கரைசேர்த்திருந்தனர். பின்னர் மீண்டும் கடலில் படகை இறக்குவதற்குத் தயாரான நிலையில் கடற்கரையில் நின்ற இன்னும் சில ஆண்களும், பெண்களும், ஏறினர். 

பின்னர் பொங்கிவந்த கடலலையில் படகு கரையை நேக்கி தூக்கி வீசப்பட்டது. இதனால் படகிலிருந்த ஆண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அவருக்கு மேலே படகு வீழ்ந்துள்ளது. இதனால் அவர் உபாதைக்குட்பட்ட நிலையில் கரையில் நின்றவர்களால் மீட்கப்பட்டார்.

கரையை நோக்கி படகு அலையினால் தூக்கி வீசப்பட்டத்தில் படகிலிருந்த ஏனைய ஆண்களும், பெண்களும், மிகவும் தெய்வாதீனமாக கரையிலிருந்தோரால் காப்பாற்றப்பட்டனர். 

இதனால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தில் தெய்வாதீனமாக அனைவரும் காப்பாற்றப்பட்டதாக   மக்கள் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .