2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் விஜயத்தையொட்டி மட்டக்களப்பில் அபிவிருத்திகள்

Editorial   / 2017 ஜூலை 22 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தின் போது 55 கோடி ரூபாய் (ரூ.550 மில்லியன்) பெறுமதியான  அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், சில திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பிரதமர், எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள், அன்றையதினம் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,  நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X