Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி, இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில், மட்டக்களப்பு நகரில் பாரிய கவனயீர்ப்புப் பேரணி, நேற்று (08) மாலை முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த பேரணி, மட்டக்களப்பு கறுத்த பாலத்திலிருந்து ஆரம்பமாகி, பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று, மேற்படிக் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நிறைவடைந்தது.
ஆயிரக்கணக்கான பெண்கள் இதில் கலந்துகொண்டு, “வேண்டும்.. வேண்டும்.. தேர்தல் வேண்டும்”, “நடத்து.. நடத்து.. தேர்தலை நடத்து” மற்றும் குறித்தொதுக்கு.. குறித்தொதுக்கு.. பெண்ணின் இடத்தை குறித்தொதுக்கு” போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர். (N)

49 minute ago
51 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
20 Nov 2025