Freelancer / 2023 ஏப்ரல் 12 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் சந்திவெளி - ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வரதராசா எனும் 45 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
கடற்தொழிலில் ஈடுபடும் இவர் மது போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார்.
வழமையாக காலையில் கடலுக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் இவர், சில நாட்களில் இரவு நேரத்திலும் கடலுக்கு சென்று வருவார்.
சம்பவ தினமான நேற்றிரவு (11) 8.45 மணியளவில் அதிக போதையுடன் கடலுக்கு செல்வதாக கூறிச்சென்ற இவர், ஜீவபுரம் புகையிரத பாதையில் அமர்ந்திருந்த போது, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதம் வருவதை கண்டு எழுந்து செல்ல முயற்சித்தபோதும், அதிக போதை சுயகட்டுப்பாட்டை இழக்க வைத்ததால் அவ்விடத்திலேயே புகையிரதத்தில் மோதுண்டு தலை, கழுத்து, நெஞ்சு பகுதிகள் புகையிரதத்தில் சிக்கி கை, கால்கள் உடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இவரது சடலத்தை ஆடைகளை வைத்தே உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
சடலம், அதே புகையிரதம் மூலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சந்திவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிசாரை பணித்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று (12) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. R
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025