Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூலை 09 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அரசியல் மாற்றமடைந்தாலும், புதிய அரசமைப்பு அமைக்கப்படாவிட்டால், இந்நாட்டுக்கு ஒரு சாபக்கேடாகவே அது காணப்படும் எனக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், அவ்வாறான நிலை காணப்படுமாயின், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மாற்றங்களால் சீரழியுமென்றார்.
மட்டக்களப்பு மாவட்ட வான் மாயவட்டைத் தெற்குக் கண்டத்தில், நேற்று (08) நடைபெற்ற காலபோக வேளாண்மைச் செய்கை அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கமநலப் சேவைப் பிரிவில் 14 விவசாயக் கண்டங்களில் மொத்தம் 1400 ஹெக்டயர் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டது. இதில் மாயவட்டை தெற்குக் கண்டத்தில் 300 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கடந்த அரசாங்கம், அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது வம்சத்தைத் தொடர் ஜனாதிபதியாக வருவதற்கான செயற்பாட்டை முன்னெடுத்தார். ஆனால், தேர்தல் வந்தபோது, சர்வதேசத்தின் உதவியுடன் அந்த முடிவு மாற்றப்பட்டது.
“அரசியல் உரிமை மாதிரி, அபிவிருத்தி உரிமையும் சிறபான்மை மக்களுக்குத் தேவை. அதற்காகத்தான் இணக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறோம்.
“ஆனால், தற்போது அரசியலில் குழப்பகரமான நிலைமை தோன்றியுள்ளது. இவ்வாறான நிலைமைகள் தோன்றினாலும், உலக அரசியலில் பல விடயங்கள் மாற்றியமைக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago
9 hours ago