2025 மே 02, வெள்ளிக்கிழமை

புதிய கலப்பின சோள விதைகள் அறிமுகம்

Freelancer   / 2023 ஜூலை 13 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்ட உள்ளூர் கலப்பின சோள விதைகள் அறிமுகம் செய்யப்பட்டு, புதிய நடுகை முறையில் மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தை கிராமத்தில் நடுகை செய்யப்பட்டது. 

அதன் வெற்றிகரமான அறுவடை விழா  புதன்கிழமை(12)தொழில்நுட்ப உத்தியோகத்தர் குலசிங்கம் கிலசனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

கலப்பின சோள விதைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடுகை செய்யப்பட்டுவரும் நிலையில், உள்ளூர் கலப்பின சோள விதைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த உள்ளூர் கலப்பின சோள விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .