2025 மே 24, சனிக்கிழமை

புதிய நிர்வாகத்துக்கான தெரிவு மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஜூலை 31 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அடுத்த ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக் கூட்டம், காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற போது, சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதில் குழப்ப நிலை ஏற்பட்டது.

தலைவர் பதவிக்கு, காத்தான்குடியிலுள்ள பிரதானமான 3 ஜும்ஆ பள்ளிவாசல்களின் தலைவர்களே, வருடாந்தம் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அடுத்த தலைமைப் பதவி, காத்தான்குடி 1ஆம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வழங்கப்படல் வேண்டும். இந்தப் பள்ளிவாசலின் நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக் கூட்டம், இன்னும் நடைபெறாததாலும், இந்தப் பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வக்பு சபை நியமித்துள்ளதாலும், இதற்கான தலைமைப் பதவியென்பது பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளதால், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதில் குழப்ப நிலை ஏற்பட்டது.

பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்ற பள்ளிவாசலின் வளாகம் மற்றும் மண்டபம் ஆகியனவற்றுக்கு,  பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X