Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 மே 15 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிக்கியிருந்த மட்டக்களப்புக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 43 பேர், நேற்று முன்தினம் (13) அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, கல்குடா, வாகரை, பணிச்சங்கேணி, தட்டுமுனை, கண்டலடி, ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.
தொழில் நிமித்தம் காரணமாக, புத்தளம் மாவட்டத்தின் நரகளி பிரதேசத்தில் சிக்கியிருந்தவர்களை, பஸ்ஸில் அழைத்துவந்ததாக, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
புத்தளத்துக்குச் சென்ற இவர்கள், கொரோனா தடுப்பு ஊரடங்குச் சட்டம் காரணமாக சொந்த இடத்தக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு இன்னல்களுடன் சிக்கியிருந்ததாக, அவர் தெரிவித்தனர்.
புகையிலை பயிர் செய்கை, மரக்கறித் தோட்டப் பயிர் செய்கை, கரவலை மீன்பிடித் தொழில் நிமித்தம் இவர்கள் 2 மாதங்களுக்கு முன்பு புத்தளத்துக்குச் சென்றுள்ளனர்.
வாகரை, வாழைச்சேனை ஆகிய பொலிஸ் பிரிவில் வசிப்போர், பொலிஸ் நிலையத்தில் தமது விவரங்களைப் பதிவுசெய்த பின்னர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
2 hours ago
3 hours ago