எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜூலை 26 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோயாளர்களைப் பராமரிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக ஏறாவூரில் நிர்மானிக்கப்பட்டு வரும் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தை, எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் திறப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தலைவரும் புற்றுநோய் வைத்திய நிபுணருமான டொக்டர் ஏ.இக்பால் தெரிவித்தார்.
புற்றுநோய் வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.இக்பாலின் முயற்சியால் அவரின் தலைமையில் ஏறாவூரைச் சேர்ந்த கல்வியலாளர்கள் ஒன்று சேர்ந்து, இந்த கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் புற்றுநோயாளர்கள், அவர்களுக்கு உதவியாக வருவோரின் தங்குமிடம் மற்றும் பிரயாண சிக்கல்களை இல்லாதொழிப்பதோடு, புற்றுநோயாளர்கள் இறுதிக்கட்டத்தை அடைந்து மரணத்தறுவாயில் உள்ள நோயாளிகளுக்கு வேதனைக்குறைப்பு சிகிச்சை பராமரிப்பை இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்டு, இந்த கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.
இந்த நிலையம், ஏறாவூரிலுள்ள சவுக்கடி வீதியில் அமைதியான சூழலில் அமையப் பெற்றுள்ளதுடன், நோயாளிகளுடன் அவர்களின் உறவினர்களும் தங்க கூடிய வகையில் வீடுகள் போன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பராமரிப்புத் திட்டமானது, வறுமையானவர்களுக்கும் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுபவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக, டொக்டர் ஏ.இக்பால் தெரிவித்தார்.
இந்த நிலையம் 2016ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நியைலத்துக்கான கட்டட நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
தனவந்தர்கள் வழங்கிய உதவிகள் வழங்கிய உதவிகளைக் கொண்டு இதன் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், செப்டெம்பர் மாத இறுதிப் பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகளை, இதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 100 நோயாளிகளை இந்த நிலையத்தில் வைத்து பரமாரிக்க கூடிய வகையில் இங்கு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 minute ago
15 minute ago
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
21 minute ago
34 minute ago