2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஹந்தானையில் மண்சரிவு: சாரதிகளுக்கு எச்சரிக்கை

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி ஹந்தான-உடுவெல சாலையில் பல இடங்கள் நீரில் மூழ்கி மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர சாரதிகளை எச்சரித்துள்ளார்.

கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இந்த சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.

குறிப்பாக இரவில் இந்த சாலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதால், சாரதிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X