Freelancer / 2022 மார்ச் 30 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - வாழைச்சேனை, பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நேற்று (29) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் பொலிசார் சுற்றிவளைத்த போது, அங்கு ஹெரோயின் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 50 மில்லிக்கிராம் ஹெரோயினை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25 - 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், இவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்கள் எனவும் இவ்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். (R)
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026