Freelancer / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன புல்லுமாலையில் புதைத்து வைக்கப்பட்ட வெடிமருந்துகளையும், புலிபாய்ந்தகல் காட்டுப்பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் மற்றும் அதற்கான 8 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று புதன்கிழமை (12) மாலை விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சின்ன புல்லுமலை வயல்பகுதியில் உழவு இயந்திரத்தால் வயலை உழுதபோது பெரல் ஒன்றின் மூடி வெளியே வந்ததையடுத்து நிலத்தை தோண்டியபோது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பரல் ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினா.
இதனையடுத்து பொலிஸார் பரலில் இருந்து பெருமளவிலான வெடி மருந்துக்களை மீட்டுள்ளனர்.
இந்த பகுதி முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதுடன் மீட்கப்பட்ட வெடி மருந்துக்களை நீதிமன்ற உத்தரவினை பெற்று செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். (R)




3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago