2025 மே 02, வெள்ளிக்கிழமை

பெட்டிக்கடைகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 மே 27 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி

வீதியேரங்களில் தகரக் கொட்டகைகளில் வைத்து சர்பத், கிழங்கு, வடை, தேனீர், உள்ளிட்ட தமது சிறிய வாழ்தாதாரத்தை மேற்கொண்டு வந்தவர்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிரந்தர பெட்டிக்கடைகளை, மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலிருந்து பல சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு, இன்று (27) வழங்கி வைத்துள்ளது.

குருக்கள்மடம், துறைநீலாவணை, கோவில்போரதீவு, மண்டூர், ஆகிய இடங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நால்வருக்கு, இவ்வாறு பெட்டிக்கடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வீதி ஓரங்களில் தகரக் கொட்டகைகளிலும், சிறிய மேசை மீதும் தாம் இதுவரைக காலமும் சிறிய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு, தமது குடும்பத்தைப் பாதுகாத்து வந்த தமக்கு, நிரந்தர வீதியோர பெட்டிக்கடை வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளமையானது மிகுந்த சந்தேசத்தை அளிப்பதாகவும், இதனால் தமது வாழ்வாதரம் மேலோங்கும் என எதிர்பார்ப்பதாகவும், பயனாளிகள் இதன்போது தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X