எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 மார்ச் 10 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘பெண்’ என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக, மனித உரிமைச் செயற்பாட்டாளரும் பெண் உரிமைச் செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்னராஜா தெரிவித்தார்.
இதனாலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டு. ஊடக மய்யத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் சென்று பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில், நானும் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே ஏனைய பெண்களையும் ஈடுபடுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.
“ஆனால், என்மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தால் நடத்தை தொடர்பான அவதூருகளும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன.
“வடக்கு, கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பாக பேசவேண்டிய தேவை, தமிழ் சமூகத்தில் உள்ள எங்களுக்கு அதிகமாகவுள்ளது.
“இவ்வாறான நிலையில், எனக்கு ஊக்கமளிப்பதற்கு பதிலாக என்மீது சேறு பூசும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago