Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வார விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துப் பெண்கள் கூட்டமைப்பு,பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்பன இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இக் கவனயீர்ப்பு ஊர்வலத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத் தலைவிகள்,பல்கலைக்கழக மாணவிகள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஊர்வலத்தில் பங்கு கொண்டார்கள்.
நவம்பர் மாதம் 30ஆம் திகதி தெற்காசிய பெண்கள் செயற்பாட்டு தினமாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து மட்டக்களப்பு பஸ் நிலையம் வரையில் கவனயீர்ப்பு பேரணி சென்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படுத்தும் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பெண்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
"வளங்களை அழித்து வன்முறைக்கு இடமளிப்பதை நிறுத்துவோம்", "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு துரித நீதிவேண்டும்" உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
பேரணியானது மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தினை வந்தடைந்ததும் அங்கு பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையிலான விழிப்புணர்வு நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
41 minute ago
43 minute ago
1 hours ago