2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’பெண்களே அரசியலுக்கு வாருங்கள்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஜூலை 22 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் தேர்தலில் வாக்களிப்பவர்களாக மட்டும் இருக்காமல், நேரடியாக அரசியலில் ஈடுபட முன் வரவேண்டுமென, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் சங்கங்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த கால யுத்தத்தால் நமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து, அநாதரவான பெண்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகம் இருக்கின்றன. இவ்வாறான பெண்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

“இன்று நமது சமூகத்தில் பெண்கள் இடை நடுவில் கல்வியை விட்டு விடுகின்றனர். அவ்வாறில்லாமல், கல்வியில் பெண்கள் ஆர்வம் காட்டி, கல்வியை தொடர வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X