ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருட இறுதியில் ஆரம்பித்து அடுத்த வருடம் முற்பகுதி வரை செய்கை பண்ணப்படவுள்ள பெரும்போகப் பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களுக்கான திகதிகள், அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா. உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டங்களுக்கு, அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு, துறைசார்ந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நவகிரி, தும்பங்கேணி ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்களின் செய்கைகளுக்கான ஆரம்பக் கூட்டம், வெல்லாவெளி பிரதேச செயலகத்தை அண்டி அமைந்துள்ள கலாசார மண்டபத்தில், நாளை (10) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல் ஆகிய சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் செய்கை பண்ணப்படும் நெற் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், நாளையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கோறளைப் பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கட்டுமுறிவு, மதுரங்கேணி, கிரிமிச்சை ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் செய்கை பண்ணப்படும் நெற் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை (14) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு, கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் வாகனேரி, புணாணை, தரவை, வடமுனை ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் செய்கை பண்ணப்படும் பிரதேசங்களுக்கான ஆரம்பக் கூட்டம், கோரகல்லிமடுவிலுள்ள ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago